ஓம் சக்தி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.

திருமணங்களுக்காக தேவஸ்தான திருமண மண்டபத்தை பதிவு செய்பவர்களுக்கான நிபந்தனைகள்

 1. திருமணத்திற்கு மண்டபத்தை பதிவு செய்யும் தினத்தன்று ரூபா 10000/= முற்பணமாக செலுத்த வேண்டும்.
 2. மிகுதி தொகையை திருமணத்திற்கு முன்பதாக செலுத்த வேண்டும்.
 3. சமையல் பாத்திரங்கள், தளபாடங்களுக்கான பாதுகாப்பு முற்பணமாக ரூபா 5000/= செலுத்த வேண்டும். பொருட்கள் எவ்வித குறைவு, பழுதுகளுமின்றி மீள கையளித்தல் பின் வைப்பு பணமாக ரூபா 5000/= திருப்பிக்கொடுக்கப்படும்.
 4. தேவஸ்தானத்துக்கு சொந்தமான பொருட்கள் (தேசப்படுத்தப் பட்டோ) அல்லது காணமல் போயிருந்தால் அதற்குரிய கட்டணத்தை கட்டுப் பணத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும்.
 5. திருமணத்திற்கு முன் தினத்தன்று மாலை 7.00 மணிக்கு முன்பதாக சமையல் பாத்திரங்கள், தளபாடங்களை பொறுப்பான ஒருவர் பெற்றுக்கொண்டு, திருமணம் முடிந்த பின் பொறுப்பேற்றவாறு மாலை 5.00 மணிக்கு முன்பதாக ஒப்படைத்தல் வேண்டும்.
 6. திருமணத்திற்கு முதல் நாள் இரவு 10.00 மணிவரை உங்கள் வாகனங்கள் வருவதற்கு அனுமதிக்கப்படும் பாதுகாப்பு கருதிற் கொண்டு 10.00 மணிக்கு மேல் பிரதான வாசல் கேட் திறக்கப்படமாட்டாது.
 7. தேவஸ்தான வளாகத்துக்குள்லேயோ அல்லது திருமண மண்டபத்திற்குள்லேயோ மதுபானம், மாமிசம் பாவிக்க கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
 8. திருமணம் முடிந்த பின் சமையல் பாத்திரங்கள் கழுவப்பட்டு சுத்தம் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
 9. சமையலுக்கு அமர்த்தப்படும் சமையல்காரர்கள் அவசியம் இந்துவாக இருத்தல் வேண்டும்.
 10. திருமண மண்டபத்திலும் சமையலறையிலும் பாவிக்கப்படும் பொலித்தீன்கள், போத்தல்கள், ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் உரப்பைகளில் போட்டு வெளியில் வைக்கப்பட வேண்டும்.
 11. திருமணத் திகதிகளில் மாற்றம் ஈடபடும் பட்சத்தில் தகுந்த ஆதாரத்துடன் கடிதம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். செலுத்திய பணம் திருப்பிக்கொடுக்கப் படமாட்டாது.
 12. வாழைமரம் குருத்து சோடனைகள் தாங்களே செய்து கொள்ள வேண்டும்.
 13. மேள வாத்தியம் தாங்களே ஏற்பாடு செய்ய வேண்டும்.
 14. குருக்கள், குருக்களுக்கு தேவையான மாணவறை சடங்கு பொருட்கள் திருமண வீட்டாரோ ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
 15. மணமேடையை தவித்து மண்டப சோடனைகள் செய்து கொள்ளலாம். (மணமேடையில் எந்தவித அலங்காரமும் செய்ய முடியாது) .
 16. மணவறை இலவசமாக வழங்கப்படும்(மின் அலங்காரத்துடன்)
  • பிளாஸ்டிக் நாற்காலி
  • இரும்பு நாற்காலி
  • சாப்பாட்டு மேசை
  • சமையல் பாத்திரங்கள்
  மேற்குறிப்பிட்ட பொருட்கள் அடங்கலாக திருமண கட்டணம் ரூபா 31000/=
  கலாசார மண்டபம் 14000/=
  மொத்தம் 45000/=
 17. இது உங்களது சொத்து, சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்வது உங்களது கடமை.
 18. பாதுகாப்பின் நிமித்தம் மேல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் தேவைக்கேற்ப நிர்வாக சபையினால் மாற்றப்படும்.

சமூக வலைத்தளங்கள்

முகநூல் (facebook)

ட்வீட்டர் (Twitter)

சகல உரிமைகளும் வரையறுக்கப்பட்டவை : COPYRIGHTED © 2014-2015
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.