ஓம் சக்தி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.

ஆலய நிர்வாகத்தால் நடாத்தப்படும் சேவைகள்

எமது தேவஸ்தானத்தின் ஆன்மீக பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. எமது சமூகத்தின் இன்றைய நிலைமையை கருத்தில் கொண்டு இத்தேவஸ்தானம் சமூகப்பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.

கணினிவகுப்பு

பாடசாலை கல்வியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்காக 2001 ல் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இங்கும் ஆறுமாத பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது 15 மாணவ மாணவிகள் பயிட்சியை பெற்று வருகின்றார்கள்.

தையல் வகுப்பு

பாடசாலை கல்வியை நிறைவு செய்த யுவதிகளுக்கான 1996 ல் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இங்கு ஆறுமாத பயிற்சி வழங்கப்படுகிறது. தற்போது 20 மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

அறநெறி பாடசாலை

தேவஸ்தானத்தால் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக ஞாயிறு தோறும் அறநெறி பாடசாலை நடைபெற்று வருகின்றது. தற்போது 350 மாணவர்கள் வருகை தரும் இப்பாடசாலையில் 10 ஆசிரியர்கள் பணிபுரிகின்றார்கள். ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு தேவஸ்தானத்தால் வழங்கப்பட்டு வருகின்றது.

பாலர் பாடசாலை

பாலர் கல்வியின் முக்கியத்துவம் கருதி 1993 ம் ஆண்டு பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 15 மாணவர்களுடன் ஆரம்பித்த இப்பாடசாலை தற்போது 130 மாணவர்களுடன் செயற்பட்டு கொண்டிருக்கின்றது. நன்கு பயிற்சி பெற்ற 06 ஆசிரியர்களால் நடத்தப்படுவதால் ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் தொகை அதிகரித்துக்கொண்டே வருகின்றது. வருடாந்தம் விளையாட்டுப் போட்டி, கலைவிழா என்பனவும் நடாத்தப்பட்டு வருகின்றது.


மேற்படி பயிற்சிகள் அனைத்தும் இலவசமாக நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான மாணவர்கள் இத்திட்டங்களால் பயன் பெற்றுள்ளனர்.

புலமை பரிசில் வழங்கல்

உயர்தரம் மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய வறுமைநிலை காரணமாக கல்வியை தொடர இயலாத மாணவர்களுக்கு எமது தேவஸ்தானம் புலமை பரிசில் வழங்கி வருகின்றது.

தொண்டர் ஆசிரியர் கொடுப்பனவு

பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பாடசாலைகளில் வேண்டுகோளுக்கு இணங்க மேலதிக ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை எமது தேவஸ்தானம் வழங்கி வருகின்றது.

விஷேட வகுப்புகள்

பாடசாலை பெறுபேறுகளை உயர்த்தும் முகமாக க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான விஷேட வகுப்புக்களை சனி, ஞாயிறு தினங்களில் எமது தேவஸ்தானம் நடாத்தி வருகிறது. மாதிரி வினாப்பத்திரங்களும் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றது. வருடாந்தம் தெரிவு செய்யப்பட்ட வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்படுகின்றது.

ஆண்டு 11 மாணவர்களுக்கான இலவச கருத்தரங்குகள்.

ஆண்டு 13 மானவர்களுக்கான மாதிரி வினாத்தாள்கள் மாதந்தோறும் பாடசாலைக்கு விநியோகம்.

பாலர் பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி, வாணி விழா, பரிசளிப்பு விழா மற்றும் வருடர்ந்த கலை விழா.

பல்கலைக்கழகத்திற்கு சித்தி பெற்று உதவி நாடிய மாணவர்களுக்கு புலமைப்பரிசு வழங்கல்.

வருடாந்த இலவச மருத்துவ முகாம்.

சமூக வலைத்தளங்கள்

முகநூல் (facebook)

ட்வீட்டர் (Twitter)

சகல உரிமைகளும் வரையறுக்கப்பட்டவை : COPYRIGHTED © 2014-2015
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.