ஓம் சக்தி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான 2013/2014 வருட செயற்பாடுகள்

 1. அருள்மிக ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மஹா கும்பாபிஷேகம் 15-11-2014 அன்று காலை 8.15 சுபவேளையில் சிறப்பாகவும் பக்தி பூர்வமாகவும் நடந்தேறியது.
 2. தேவஸ்தானத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கலாசார மண்டபத்தில் அடித்தளத்தில் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு இப்பொழுது பாவனைக்கு விடப்படுகிறது.
 3. பழுதடைந்த மலசலகூட குழி திருத்த வேலைகள் மேற்கொள்ளப்பட்டது.
 4. கருமகாரிய மண்டபம் கட்டுவதற்காக ஆற்றங்கரை வீதியில் காணி வாங்கப்பட்டு கருமகாரிய மண்டபம் கட்டப்பட்டது.
 5. வழிப்பிள்ளையார் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 6. ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 7. 2014 ம் வருட மாசி மகோற்சவ திருவிழா 23-01-2014 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு 15-02-2014 அன்று பஞ்சரத பவனி வெகு சிறப்பாக நடந்தேறியது. பல அடியார்களின் வேண்டுகோளுக்கிணங்க தீர்த்தோற்சவம் மூன்றாம் நாள் நடைபெற்றது.
 8. அறங்காவல் சபை நடர்த்துவதற்கும் அதிதிகள் வருகை தரும்போது தங்குவதற்கும் வசதியாக கல்யாண மண்டபத்தில் மின்சார உபகரணங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையின் மேல்மாடியில் புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.
 9. T.R 1 சட்ட திருத்தங்கள் அறங்காவல் சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது. மேலும், பொதுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெறுவதென தீர்மானிக்கப்பட்டது.
 10. 2014 ஆண்டுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது 07 புதிய அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். புதிய T.R 1 சட்டத்தின் படி அறங்காவல் சபையில் அங்கம் வகித்த ஒருவர் மீண்டும் இரண்டு வருடங்களுக்கு அங்கம் வகிக்க முடியாது என்ற சட்டம் அமுலாக்கப்பட்டது.
 11. தேவஸ்தானத்தால் நடத்தப்பட்ட மின் இணைப்பு பயிற்சி வகுப்புக்கள் மாணவர்கள் இல்லாத காரணத்தினால் இடைநிறுத்தம் 2013ம் வருடம் செப்டம்பர் மாதம் செய்யப்பட்டது.
 12. தேவஸ்தான அறநெறிப் பாடசாலை மாணவி ச. ஆர்த்தி சமய அறிவுப் போட்டியில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றார்.
 13. உக்குவெல அஜ்மீர் தேசிய பாடசாலையில் இந்து சமயம் கற்பிக்கும் ஆசிரியருக்கு தேவஸ்தானத்தால் 6000/= உதவிப்பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
 14. மாத்தளை மாவட்டத்தில் இருந்து பல்கலைகழகங்களில் உயர் கல்வி கற்கும் 17 வறிய மாணவர்களுக்கு உதவிப்பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
 15. பெண்கள் பகுதி மலசலகூட திருத்த வேலைகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 16. ஸ்ரீ முருகன் தேர் திருத்த வேலைகள் ஆரம்பித்து நடைபெற்று வருகிறது.
 17. பழுதடைந்த சிறிய சித்திர தேர் திருத்த வேலைகள் செய்யப்பட்டு, வர்ணம் பூசப்பட்டு பூரணப்படுத்தப்பட்டது.
 18. CCTV கெமராக்கள் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கான விளைமனுக்கள் கோரப்பட்டுள்ளது.
 19. இணையத்தளம் ஆரம்பிப்பதற்கு ஆயர்த்தன்கள் செய்யப்பட்டுள்ளது.
 20. தேவஸ்தானத்திற்கு "ஜெனரேட்டர்" இயந்திரம் (125 KVA) வாங்குவதென தீர்மானிக்கப்பட்டு அதற்கான விலை மனு பெறப்பட்டது.
 21. பிரதி வெள்ளிக்கிழமைகளில் மாலையில் பஜனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
 22. அறநெறிப் பாடசாலை மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கில வகுப்பு ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
 23. தேவஸ்தானத்தினால் நடாத்தப்பட்டு வந்த நூல் நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்கான ஆயர்த்தங்கள் நடைபெற்று வருகிறது.
 24. கலாசச்சார மண்டபம் அமரர் மாரிமுத்து செட்டியார் அவர்களின் பெயரில் அழைக்கப்பட வேண்டுமென பிரேரணை கொண்டுவரப்பட்டது. இதனை பொதுக்கூட்டத்தில் அங்கீகரிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
 25. கல்வி பகுதியை சிறப்பாக நடாத்த வசதியாக இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை திரு. புண்ணியசீலன் அவர்கள் நன்கொடையாக வழங்கிய காணியில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.அதற்கான அங்கீகாரம் பொதுக்கூட்டத்தில் பெறுவதென தீர்மானிக்கப்பட்டது.
 26. மாத்தளை மாவட்டத்தில் 2014 இல் க.பொ.த சா/த பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்காக 13 நிலையங்களில் சனி,ஞாயிறு நாட்களில் பயிற்சி வகுப்புக்கள் நடைபெற்று வருகிறது.
 27. 2015 மாசிமக மகோற்சவ திருவிழா ஏற்பாட்டிற்கான ஆயர்த்தங்கள் நடைபெற்றுள்ளது.
 28. தேவஸ்தானத்தில் கடமை புரியும் உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடமைகளை திருப்திகரமாக செய்து வருகிறார்கள். அவர்களுடைய தேவைகளை அறங்காவல் சபை பூர்த்தி செய்துள்ளது.
 29. இலவச பாலர் பாடசாலை, இலவச தையல் வகுப்புக்கள், கணணி வகுப்புக்கள், அறநெறி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.
 30. தேவஸ்தானத்தினால் நடாத்தப்படும் இரண்டு பூக்கடைகளும் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு இலாபகரமாக இயங்கி வருகிறது.
 31. தேவஸ்தானத்தால் நடாத்தப்படும் புத்தகக்கடை நஷ்டத்தில் இயங்குகிறது.மேலும் முதலீடு செய்யப்பட்டு இரு வருட காலத்துக்குள் இலாபகரமாக செயல் படா விட்டாலும் மூடுவதற்கு தீர்மானிக்கப்படது.
 32. தேவஸ்தானத்தால் வாடகைக்கு விடப்பட்டிருக்கும் கடைகளிலிருந்து கிடைக்கப்பெறும் வாடகைப் பணத்த கொண்டு கல்வி அறக்கட்டளை ஒன்று ஆரம்பித்து, கல்விக்கான தேவைகளை பூர்த்தி செய்வது என்ற தீர்மானம்.
 33. மாத்தளை மாவட்டத்தில் வறுமை கோட்டில் வீட்டு வசதியற்ற குடும்பங்களுக்கு காணி வாங்கி அதில் சிறிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு சிறு தொகை வாடகையில் கொடுப்பதற்கான தீர்மானம்.
 34. பல வருடங்களாக தேவஸ்தான கல்யாண மண்டப அறையில் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ ஐயப்ப சுவாமிகளின் சிலையை வேறு இடத்துக்கு மாற்றுவதற்காக, அதன் பொறுப்பாளரிடம் கலந்துரையாடப்பட்டது. அதற்கான ஆலயம் அமைப்பதாகவும், சிலையை மாற்றுவதற்கு வெகு விரைவில் ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள்

முகநூல் (facebook)

ட்வீட்டர் (Twitter)

சகல உரிமைகளும் வரையறுக்கப்பட்டவை : COPYRIGHTED © 2014-2015
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.