ஓம் சக்தி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.

தேவஸ்தான சட்டதிருத்தம் (அறங்காவல் சபை) : ஆலோசனையின் கீழ் உள்ளது.

 1. சபையின் பெயர்
 2. முகவரி
 3. நோக்கங்கள்
 4. சபையின் அதிகாரங்கள்
 5. அறங்காவல் சபை பதவி அங்கத்தவர்கள்
 6. தேவஸ்தான அறங்காவல் சபை அங்கத்தவர்கள்
 7. வாக்காளர், வாக்காளர் பதிவேடு தேர்தல்
 8. தேவஸ்தான நிதி
 9. பொருளாளரின் கடமைகள்
 10. உயர் பதவிகள் தேர்ந்தெடுக்கப்படும் முறைகள்
 1. சபையின் பெயர்

  "மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் அறங்காவலர் சபை" என அழைக்கப்பட்டது.

 2. முகவரி

  மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ,

  தேவஸ்தானம் ,

  மாத்தளை.

   

 3. நோக்கங்கள்

   அன்னை ஸ்ரீ முத்துமாரியின் மகிமையை உலகறியச் செய்தல்.

   இந்து பக்தர்களில் அபிலாஷைகளுக்கு உகந்ததாக தேவஸ்தானத்தை ஒரு சிறந்த வழிபாட்டுத் தளமாக மேம்படுத்துதல் இந்து சமயத்தை மேன்மை கொள்ளச் செய்வதுடன் சமய, சமூக அபிவிருத்திக்காக ஈடுபாடு கொள்ளல்.

   1. சமய வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றல்.
   2. சைவ சமய உயர்வான கொள்கைகளை இந்து மக்களுக்கு விளக்குதல்.
   3. சமய சடங்குகள், திருவிழாக்கள், சமய அனுஷ்டானங்கள் இவற்றின் மூலம் சைவ சமயத்தின் மகிமையை மக்களுக்கு உணர்த்தி, அதி ஈடுபடவைத்தல்.
   4. சொற்பொழிவுகள், தேவார திருமுறைகள், பட்டிமன்றங்கள், கதாபிரசங்கங்கள் மூலம் சைவ சமய உயர்ந்த கொள்கைகளை மக்களுக்கு தெளிவு படுத்துதல்.
   5. சைவ சமயத்திலிருந்து வேறு மதத்திற்கு மாறிச் செல்லும் வாய்ப்பைத் தடுக்க ஆவண செய்தல்.
  1. மாத்தளை வாழ் அனைத்து இந்து பிள்ளைகளுக்கும் எல்லா வழிகளிலும் கல்வி அறிவினை ஊட்டுதல். ஆரம்பக்கல்வி , தொழிற்கல்வி , சமய கல்வி மற்றும் மாத்தளை தமிழ் பாடசாலைகளின் அனைத்து மாணவர்களும் முன்னேறுவதற்கும் , திறமையான சித்திகள் பெறுவதற்கும், தொழில்துறையில் சேர்வதற்குமான வழி முறைகளைக் காட்டுதல்.
  2. தேவஸ்தான தேவைக்களுக்கு அப்பால், மிஞ்சும் நிதிகளை சமூக சேவைகளுக்கும், கல்வி சேவைகளுக்கும் பயன்படுத்தல்.
  3. சமயம், கல்வி,கலாசாரம், இவைகளை மேம்படுத்த உதவும் கட்டடங்கள் நிர்மாணித்தல்.
  4. இந்து மக்களின் எதிர்கால நன்மையையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு கல்விக்கும் சமூக நலனுக்கும் தனித்தனியாக அறநிதியங்கள் இரண்டை ஆரம்பித்தல்.
  5. தேவஸ்தானத்தால் நடாத்தப்படும் விஷேட திருவிழாக்கள், பூஜைகள் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் அடியார்கள் தெரிந்து கொள்ளும் முறையாக பிரசுரங்கள் வழங்குதல்.
 4. சபையின் அதிகாரங்கள்
   1. பொதுக்கூட்டம் தேர்தல் முடிவுற்று இரண்டு மாத கால அவகாசத்திற்குள் நடைபெற வேண்டும். பொதுக்கூட்டத்தில் கடந்த வருட செயற்பாடுகளும், புதிய வருடத்திற்கான திட்டங்களும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படல் வேண்டும். வரவு செலவு அறிக்கை பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக கூட்டத்தில் வாசிக்கப்படும்.
   2. தேவஸ்தானத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு , நீண்டகால வளர்ச்சித்திட்டமும் அதனை முறைப்படி செயற்படுத்த குறுகிய கால திட்டங்களும் உருவாக்கப்படல் வேண்டும்.
   3. தேவஸ்தானத்துக்கு சொந்தமான எந்தவொரு பொருளையும் விற்பனை செய்யும் போது பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்திய பின்னர் விலை மனுவில் ஆகக்கூடிய விலைக்கு விற்பனை செய்தல் வேண்டும்.
   4. தேவஸ்தான அறங்காவல் சபையில் வெற்றிடங்கள் ஏற்படும் போது அவை இரு மாதத்திற்குள் நிரப்பப்படல் வேண்டும் . அத்தெரிவு உபவிதி 7.4.5ல் குறிப்பிட்டுள்ளவாறு மட்டுமே நடைபெற வேண்டும்.
   5. தேவஸ்தானத்தால் பரிபாலிக்கப்படும் திருமண, மயானம் ஆகியவற்றின் கட்டணங்கள் அனைத்து தரப்பினருக்கும் ஏற்புடையதாக நிர்ணயிக்கப்பட வேண்டும்.
   6. பூஜைகளுக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் அது வழிபாட்டளர்களுக்கு சுமையாக இல்லாத விதத்தில் நிர்ணயம் செய்தல் வேண்டும்.
   7. தேவஸ்தான் வாக்களர் பதிவேட்டில் பதியப்படும் குடும்பங்களுக்கு பதிவு இலக்கத்துடன் தலைவராய் உறுதிப்படுத்தப்பட்ட குடும்ப அட்டை வழங்கப்படல் வேண்டும்.
   8. தேவஸ்தானத்தால் அறவிடப்படும் சகல கட்டணங்களும் வேறுபாடின்றி சமமாக அறவிடப்படல் வேண்டும்.
   9. தேவஸ்தான வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்தவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கு தேவஸ்தானத்தால் நடாத்தப்படும் பாலர் பாடசாலை , ஏனைய பயிற்சி வகுப்புக்களில் இணைய முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்.
   10. தேவஸ்தானத்தின் கட்டமைப்பில் நிலையான தோற்றத்தில் அல்லது பௌதீக அமைப்பில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மேற்கொள்ள அறங்காவல் சபையினால் உத்தேசிக்கப்படும் போது அதற்கென விஷேட பொதுக்கூட்டம் கூட்டப்பட்டு அக்கூட்டத்துக்கு சமூகமளிக்கும் தேவஸ்தான பதிவேட்டில் பதியப்பட்டுள்ள வழிபாட்டளர்களில் 65% சதவீதமானவரது சம்மதத்தின் பேரிலேயே மேட்கொள்ளப்படுதல் வேண்டும். (விஷேட பொதுக்கூட்டம் நிறைவெண் 50 பேர்)
  1. தொண்டர்கள் குழுக்கள்
   1. தேவஸ்தான அறங்காவல் சபையின் பல்வேறு சமய, சமூக செயற்பாடுகளுக்கு பொதுமக்களின் பங்களிப்பு பெற்றுக்கொள்ளும் முகமாக, தேவை ஏற்படும் போது அறங்காவல் சபையின் அங்கீகாரத்துடன் தொண்டர்கள் நியமிக்கப்படுவர். அத்தகைய தொண்டர்களுக்கு குறிப்பிட்ட பணிக்கும் காலத்துக்கும் மட்டும் செல்லுபடியாகும் அடையாள அட்டை வழங்கப்படும்.
   2. தேவைக்கேற்ப தொண்டர்கள் குழுக்களின் எண்ணிக்கையும் அவற்றின் அங்கத்தவர்களின் எண்ணிக்கையும் குழுக்களின் கடமை கூறுகளும் தேவஸ்தான அறங்காவல் சபையினால் வரையறை செய்யப்பட்டு மட்டுப்படுத்தப்படவோ விரிவு படுத்தப்படவோ அதிகாரம் உண்டு.
   3. தொண்டர் குழு உறுப்பினர்கள் தேவஸ்தான வாக்களர் பதிவேட்டில் பெயர் பதிவு செய்யப்பட்டவர்களாகவும் சமய சமூகப்பணிகளால் அக்கறையும் ஈடுபாடும் கொண்டவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
   4. இக்குழுக்கள் ஒவ்வொன்றிலும் தேவஸ்தான அறங்காவல் சபையிலாக பொறுப்பு அங்கத்தவர் இணைப்பாளராகவும், அறங்காவல் சபைத் தலைவராகவும் இருப்பார்.
   5. துறைசார் கல்விமான்களோ, அனுபவத்தவர்களோ இக்குழுக்களில் ஆலோசகர்களாகவோ நெறியாளர்கலாகவோ அறங்காவல் சபையால் தெரிவு செய்யப்படல் வேண்டும். தேவை கருதி தேவஸ்தான பதிவேட்டில் பதிவு செய்யப்படாத இந்து வழிபாட்டளர்களும் இவகையில் தெரிவு செய்யப்படலாம்.
   6. வினைத்திறன் காணப்படாத அல்லது விதிக்கப்படும் சமய சமூக விதிமுறைகளுக்குக் கட்டுப்படாத, கௌரவமளிக்கத குழுவோ அல்லது குழுவின் அங்கத்தவரோ நிரூபிக்கப்பட்டால் உடனடியாக அறங்காவல் சபையின் பெரும்பான்மைத் தீர்மானத்தின் படி மேலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆலய பணிகளில் சம்மந்தப்படமுடியாத வகையில் தடைசெய்யப்பட்டு நீக்கப்படும் அல்லது நீக்கப்படுவர்.
   7. இதற்கான புதிய குழுவை தெரிவது அல்லது புதிய அங்கத்தவரை தெரிவது தொடர்பான மாற்றுச் செயற்பாடுகள் தேவஸ்தான அறங்காவல் சபையின் தீர்மானத்திற்கு உட்பட்டதாகும்.
 5. அறங்காவல் சபை பதவி அங்கத்தவர்கள்
  1. தேவஸ்தானத்தில் தற்போது நடைமுறையிலுள்ள ஐந்து வட்டாரங்களிலிருந்து 10 (பத்து ) அங்கத்தவர்களும் வெளி வட்டாரத்திலிருந்து 02 (இருவருமாக) மொத்தம் 12 (பன்னிரெண்டு) அங்கத்தவர்களும் , தலைவர், செயலாளருடன் சேர்த்து 14 (பதினான்கு) பேரைக் கொண்ட அறங்காவல் சபை அமைந்திருக்கும்.
  2. அங்கத்தவர் தெரிவு கீழ்வரும் விதத்தில் அமைந்திருக்கும். முதலாம் வட்டாரத்திலிருந்து மூவரும் இரண்டாம் , நான்காம், ஐந்தாம் வட்டாரங்களிலிருந்து இருவர் வீதமும், மூன்றாம் வட்டாரத்திலிருந்து ஒருவரும் அவ்வவ் வட்டார வாக்களர்களால் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுவர்.
   வெளி வட்டாரத்திலிருந்து இரு அங்கத்தவர்கள் குலுக்கள் முறையில் தெரிவு செய்யப்படுவர்.
  3. வெளி வட்டாரத்திற்கு தெரிவாவதற்கு தகுதிகளை கொண்டவர்கள் இல்லாதபட்சத்தில், தேவஸ்தான வாக்காளர்கள் பதிவேட்டில் குறைந்த பட்சம் தேர்தல் திகதிக்கு முன்னர் ஒரு வருட காலத்தை பூர்த்தி செய்தவர்களாகவும், குறைந்தது க.பொ.த. (உ.த) தகமையுடையவராகவும் விண்ணப்பித்து குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படலாம்.
  4. தேவஸ்தான அறங்காவல் சபை அங்கத்தவர்களின் பதவிக்காலம் நான்கு வருடங்களாகும். ஒரு அங்கத்தவர் தனது நான்கு வருட பதவிக்காலம் பூர்த்தியானவுடன், அடுத்த வருடம் இரு வருடம் தவிர்த்து மீண்டும் போட்டியிட முடியும்.
  5. தேவஸ்தான அறங்காவல் சபையின் தலைவரும் செயலாளரும் மாத்தளை மாநகர எல்லைக்குள் குடியிருப்பவராகவும் , தேவஸ்தான வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இவர்கள் இருவரையும் அறங்காவல் சபையே தெரிவு செய்யும் அவர்களது பதவிக்காலம் ஒரு வருடமாகும்.
  6. புதிதாக தெரிவு செய்யப்படும் தேவஸ்தான் அத்தலைவர் செயலாளர், பொருளாளர் மற்றும் அங்கத்தவர்கள் அனைவரும் பண்புடனும், தேவஸ்தானத்திற்கு உண்மையாகவும் , மனசாட்சிக்கு விரோதமில்லாமலும், நடந்து கொள்வதாக ஸ்ரீ முத்துமாரியம்பிகையின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து, அதற்கான பத்திரத்தில் கையொப்பமிட வேண்டும்.
  7. புதிதாக தெரிவு செய்யப்படும் அங்கத்தவர்கள் அனைவருக்கும், TR 1 சட்டமும் அதன் உபவிதிகளின் தமிழாக்கமும் வழங்கப்படல் வேண்டும்.
  8. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அங்கத்தவர்கள் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் 4 வருடங்களுக்கு மேல் சேவை செய்த அனுபவம் இல்லாதவிடத்து, அவர்களுக்கு நிர்வாகப் பதவிகள் வழங்கப்பட மாட்டாது.
  9. எந்தவொரு குறிப்பிட்ட விஷேட வைபவத்தையும், நிகழ்வையும் காரணமாகக் கொண்டு எந்த ஒரு அங்கத்தவரின் பதவிக்காலமும் நீடிக்கப்படமாட்டது. ஆனால் எந்த வைபவத்திற்கு அவர்கள் உத்தியோக பற்றற்ற அங்கத்தவர்களாக செயற்படுவார்கள். அவர்களுடைய யோசனைகளுக்கு மதிப்பளிக்கப்படும். ஏனைய அங்கத்தவர்களுக்கு வழங்கப்படும் முதலுரிமை அவர்களுக்கும் வழங்கப்படும்.
 6. தேவஸ்தான அறங்காவல் சபை அங்கத்தவர்கள்
  1. தேவஸ்தான அறங்காவல் சபை அங்கத்துவத்தின்கான தகுதிகள்
   அறங்காவலர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்
   நல்ல சமய அறிவுடையவராகவும்
   கல்வி அறிவு, ஆளுமை திறமையுடையவராகவும்
   பண்பு, சகிப்புத்தன்மை, நேர்மை, கண்ணியமுடையவராகவும்
   ஆன்மீக உணர்வுடன் நேர்மையான தொழில் புரிபவராகவும்
   இந்த புனித ஸ்தாபனத்தின் பெயரையும், அறத்தையும் காப்பாளர்களாகவும் இருப்பர்.
   அறங்காவளர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த வட்டாரத்தில் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அனைத்து விடயங்கள் பற்றியும் மக்களுக்கு தகவல் வழங்குதல், அவர்களுடன் கலந்துரையாடல் அந்த தொகுதிகளிலிருந்து நிதிகள் சேகரிப்பதற்கு உதவுதல், மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அந்த தொகுதி இணைப்பாளராகக் செயல்படுவர்.
   ஆலயத்திற்கு அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்படுபவர்கள் இந்து வழிவந்தவர்களாகவும், முழுமையாக இந்து வழிபட்டவர்களாகவும், கௌரவமான இந்து குடும்ப பின்னணி உடையவராகவும், சமய அறிவு நிறைந்தவராகவும், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு சேவை செய்யக்குடிய கல்வி அறிவு உள்ளவராகவும், பொது அறிவு கொண்டவராகவும் ஆன்மீகத்தை கடைப்பிடிக்கக் கூடியவராகவும், இருத்தல் வேண்டும்.
   ஆலயத்தின் சேவைக் காலங்களில் சமூகமளிக்க முடியாத நிலையில் தூர இடங்களில் தொழில் புரியும் அரச, தனியார் உத்தியோகஸ்தர்கள், இலங்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் எந்தவொரு குட்டவியல் நீதிமன்றத்திலாவது தண்டிக்கப்பட்டு சிறை சென்று திரும்பியவர் அங்கத்தவர்களாக தெரிவு செய்ய தகுதியற்றவராக கணிக்கப்படுவர்.
   1. இந்துவாக இருத்தல்.
   2. விண்ணப்பிக்கும் திகதியன்று 40 வயது பூர்த்தியானவராக இருத்தல்.
   3. வெளிவட்டாரத்தை தவிர ஏனைய அனைவரும் மாத்தளை மாநகர எல்லைக்குள் குறைந்தது மூன்று வருடங்கள் தொடர்ந்து வசிப்பவராக இருத்தல்.
   4. மாநகர சபை எல்லைக்குள் தெரிவு செய்யப்படுபவர்கள் தேவஸ்தான வாக்காளர்கள் பதிவேட்டில் பதியப்பட்டவராக இருத்தல்.
   5. தேவஸ்தான அறங்காவல் சபையில் அங்கத்தவரான பின்னர் அரசியலில் பங்கு கொள்ள முடியாது. (பாராளுமன்றம், மாகாணசபை, பிரதேச சபை, நகர சபை உறுப்பினர்கள்.)
   6. ரூப 30.000க்கு குறையாத மாதாந்த நிரந்தர வருமானம் பெரும் அரச எல்லை தனியார் துறை உத்தியோகத்தர், அல்லது வருமான வரி செலுத்தம் தொழில் அதிபர், அல்லது மாத்தளை மாநகர சபை எல்லைக்குள் ரூபா 25 லட்சத்திற்கு குறையாத பெறுமதியுடைய சொத்துக்கு ஆதனவரி செலுத்துபவராக இருத்தல்.
  2. வெளிவட்டார அங்கத்தவர்களுக்கான தகுதிகள்
   1. வருமானவரி அல்லது ஆயிரம் ரூபாவிற்கு குறையாத வருடார்ந்த ஆதன வரி செலுத்துபவராகவோ அல்லது தொழில் அதிபராகவோ இருத்தல் அல்லது ரூபா 25.000க்கு குறையாத நிரந்தர மாத வருமானம் பெறும் அரச அல்லது தனியார் துறை உத்தியோகத்தவராக இருத்தல்.
   2. விண்ணப்பிக்கும் திகதியன்று 40 (நாற்பது வயது ) பூர்த்தியானவராக இருத்தல்.
   3. விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது தமது பிரதேச ஆலய அறங்காவல் சபை தலைவரிடமிருந்து நன்னடத்தை சான்றிதழும், கிராம சேவகர் அல்லது சமாதன நீதவானிடமிருந்து ஒரு அத்தாட்சிப்பத்திரத்தினையும் பெற்று வர வேண்டும்.
  3. அங்கத்தவர் பதவி விலக்கப்படும் சந்தர்ப்பங்கள்
   1. மதம் மாறினால் அல்லது,
   2. எவ்வித எழுத்துமூல தகவலும் தராமல் தொடர்ந்து மூன்று தேவஸ்தான அறங்காவல் சபை கூட்டங்களுக்கு வருகை தராமல் இருத்தல்.
   3. இலங்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்டு தண்டிக்கப்பட்டால்.
   4. தேவஸ்தான நிதியில் மோசடி செய்தால்.
   5. தேவஸ்தான சொத்துக்களை தேசம் அல்லது துஸ்பிரியோகம் செய்தால்.
   6. அங்கத்தவர் தனது தனிப்பட்ட நன்மைக்காக தேவஸ்தானத்தின் பெயரையோ அல்லது பதவியையோ பாவித்ததாக நிரூபிக்கப்பட்டால்.
   7. தேவஸ்தானத்திற்கோ, தேவஸ்தான அறங்காவல் சபைக்கோ சமய சமூக நடவடிக்கைகளுக்கோ வழிபாட்டளர்களுக்கோ களங்கமோ பாதிப்போ (வார்ததையாலோ செயலாலோ) ஏற்படும் படி நடந்ததாக நிரூபிக்கப்பட்டால்.
   8. TR 1 அல்லது தேவஸ்தான உபவிதிகளுக்கு முரணாக செயற்பட்டால் அங்கத்தவர் பதவி விலக்கப்படுவர்.
  4. அங்கத்தவரை பதவியிலிருந்து விலக்கும் முறை
   மேற்குறிப்பிட்ட அம்சங்களில் ஏதாவதொன்றின் கீழ் ஒரு அங்கத்தவரை பற்றி பொதுமக்கள், அல்லது அறங்காவல் சபை அங்கத்தவர் அல்லது பொதுமக்கள் அறங்காவல் சபை அங்கத்தவரும் இணைந்து எழுத்து மூலமாகவோ புகார் தெரிவுக்கும் பட்சத்தில் அவரது சேவை அறங்காவல் சபை அங்கத்தவர்களின்(அவசியமெனில் இரகசிய வாக்கெடுப்பின் மூலமாக) பெரும்பான்மைத் தீர்மானத்திற்கேட்ப அறங்காவல் சபை தலைவரால் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும். அதனை தொடர்ந்து ஐந்து பேரைக் கொண்ட சுவாதீன குழு நியமிக்கப்பட்ட உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு அது பற்றிய அறிக்கை ஒன்றினை தயாரித்து தமது தீர்மானத்துடன் சபைக்கு சமர்ப்பிப்பர். விசாரனைகுலுவின் தீர்ப்பே இறுதியாக கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கையை அறங்காவல் சபையின் தலைவர் மேற்கொள்வார்.
 7. வாக்காளர், வாக்காளர் பதிவேடு தேர்தல்
  1. வாக்காளருக்கான தகுதிகள்:
   1. இந்துவாக இருத்தல்
   2. விண்ணப்பிக்கும் திகதிக்கு பதினெட்டு வயதை பூர்த்தி அடைந்தவராக இருத்தல்
   3. விண்ணப்பிக்கும் திகதிக்கு குறைந்தபட்சம் நேர் முன்னராக ஒரு வருடம் மாத்தளை மாநகர எல்லைக்குள் தொடர்ந்து வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும்
  2. வாக்காளர் பதிவேட்டில் பெயர் நீக்கப்படும் சந்தர்ப்பங்கள்
   1. மரணமடையும் போது அல்லது
   2. மதம் மாறினால் அல்லது
   3. மாத்தளை மாநகர எல்லையை விட்டு குடிப்பெயர்ந்தால்
   4. சொந்த விருப்பத்தின் பெயரில் பெயரை நீக்கிக் கொண்டால்
  3. வாக்களர் பதிவேடு
   1. மாத்தளை மாநகர சபை எல்லைக்குள் வசிக்கும் வாக்களர்களுக்கான தகுதிகளைக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் தேவஸ்தான அறங்காவல் சபை அவர்களை வாக்களர்களாக அதற்குரிய பதிவேட்டில் பதிவு செய்தல் வேண்டும்.
   2. வாக்காளர் பதிவேட்டில் புதிய பதிவுகளை மேற்கொள்ள, முகவரியில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப திருத்தங்களை மேற்கொள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட காரணங்களுக்காக பெயர்களை நீக்க அறங்காவல் சபை அதிகாரத்தை கொண்டிருக்கும்.
   3. இத்திருத்தங்கள் ஒவ்வொரு வருடமும் ஜீலை மாதம் 1ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் திகதிவரை அறங்காவல் சபையால் மேட்கொள்ளப்படும்.
   4. மாத்தளை மாநகர எல்லைக்குள் தொடர்ந்து ஒரு வருடம் வாழ்பவர்கள் விண்ணப்பிக்கும் தகுதியை பெறுகின்றார்கள். இவர்கள் புதிய பதிவுகளை மேற்கொள்ள அறங்காவல் சபையால் வழங்கப்படும் விண்ணப்ப பத்திரத்தை அச்சபையால் நிர்வகிக்கப்படும் கட்டணத்திற்கு பெற்று அவற்றை பூர்த்தி செய்து ஜீலை 1ம் திகதிக்கும் செப்டம்பர் 30ம் திகதிக்கும் இடையில் சமர்ப்பிக்க வேண்டும்.
   5. உரிய ஆண்டுக்கான விண்ணப்ப பத்திரங்கள் கிடைக்கப்பெற்று அதே ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே பதியப்பட்டு நவம்பர் மாதத்தில் வாக்காளர் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
   6. தேவஸ்தான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களால் புகார்கள் செய்யுமிடத்தில் அவை முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு புகார்கள் உண்மையெனில் மட்டும் பெயர் நீக்கம் செய்யப்பட வேண்டும்.
   7. உரிய காலத்தில் சமர்ப்பிக்கப்படாத விண்ணப்ப பத்திரங்களின் பதிவுகள் தொடர்ந்து வரும் மறு வருடத்திலேயே மேட்கொள்ளப்பட வேண்டும்.
  4. தேர்தல்
   1. அறங்காவல் சபைத் தலைவர் தேர்தல் அதிகாரியாகவும் செயலாளர் அவருக்கு உதவியாளராகவும் செயல்படுவார்கள். தலைவர் இல்லாத அல்லது இயலாத பட்சத்தில் உப செயலாளராகவோ அல்லது அறங்காவல் சபையின் அங்கத்தவர் ஒருவரோ உதவியாளராக செயல்படுவார்.
   2. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தேவஸ்தான காரியாலயத்தில் வழங்கப்படும் விண்ணப்ப பத்திரத்தை அச்சபையால் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
   3. தேர்தலில் போட்டியிடும் விண்ணப்பதாரி (வெளிவட்டாரம் உட்பட) தன்னைப்பற்றி நன்னடத்தை சான்றிதலொன்றை காவல் துறையிடமிருந்து பெற்று அதனை விண்ணப்பத்துடன் இணைத்து சமர்பிக்க வேண்டும். அச்சான்றிதழ் விண்ணப்பதாரியின் நடத்தை பற்றி குறை காட்டப்பட்டிருப்பின் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
   4. ஒவ்வொரு வருடமும் ஜீலை மாதம் 30ம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடாத்தப்பட்டு புதிய அறங்காவல் சபை அமைக்கப்பட வேண்டும்.
   5. அங்கத்தவர் ஒருவரின் பதவி உரிய காலத்திற்கிடையில் காலியானால் அந்த இடத்திற்கு எஞ்சிய காலப்பகுதிக்கு இரு மாதத்திற்குள் ஒருவர் குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட வேண்டும்.
   6. இவ்வாலயத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் அங்கத்தவர்கள் வேரொருஆலயத்தில் அங்கத்துவம் வகிக்க முடியாது.
 8. தேவஸ்தான நிதி
  1. தேவஸ்தானத்தின் மாதாந்த, வருடாந்த வரவு, செலவு அறிக்கைகள் முறையாகப் பேணப்பட்டிருக்க வேண்டும்.
  2. தேவஸ்தானத்தின் அவசர தேவையின் நிமிர்த்தம் பொருளாளர் வசம் ரூபா25000/= கைக்காசாக வைத்துக் கொள்ள முடியும்.
  3. ரூபா 100,000/= (ஒரு லட்சம்)க்கு மேற்பட்ட தொகைக்கான வேலைகள் அனைத்தும் கேள்விப்பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டு எந்தவித சலுகையோ, பிரதிபலன்களையோ எதிர்பாராமல், பொருத்தமானவர்களுக்கு அறங்காவல் சபையால் வழங்கப்படல் வேண்டும். தலைவர், செயலாளர், பொருளாளர், இலாகா பொறுப்பாளர் மற்றும் அது சம்மந்தப்பட்ட ஆலோசகர் ஒருவரை கொண்ட குழு கேள்விப்பத்திரங்களை பரிசீலனை செய்து இறுதி முடிவெடுக்கும்.
  4. அறங்காவல் சபைத் தலைவர். பொருளாளர், செயலாளர் உட்பட அறங்காவல் சபை அங்கத்தவர்கள் இருவர் உட்பட ஐவர் கொண்ட கேள்விப்பத்திரக்குழு நியமிக்கப்பட்டு விலைமனு கோரல் பரிசீலித்தல் விதந்துரைத்தல்.
  5. அறங்காவல் சபை அங்கத்தவர்கள் தேவஸ்தானத்துக்கான பொருள் விநியோகிப்பவராகவோ அல்லது ஒப்பந்த்க்கரராகவோ இருக்க முடியாது.
  6. ஒப்பந்தக்கரர்களால் ஏற்படும் நிதி இழப்பை அல்லது ஏமாற்றப்படுவதை தவிர்க்க அறங்காவல் சபை தீர்மானிக்கும் தொகைக்கு மேற்பட்ட தொகைக்கான வேலைகள் அனைத்தும் முறையாக எழுத்து மூல உடன்படிக்கையின் கீழ் வழங்கப்படல் வேண்டும். வேலைகள் திருப்தியாக இல்லாத பட்சத்திலோ ஏற்றுக்கொள்ள கூடிய காரணங்கள் இல்லாமல் வேலை தாமதமடையும் சந்தர்ப்பங்களிலோ உரியவரிடம் அதற்கான நட்ட ஈட்டை சட்ட ரீதியால பெற்றுக் கொள்ள வழிவகை செய்தல்.
  7. ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட வேலைகள் உட்பட ஒப்படைக்கப்பட்ட வேலைகள் எதுவாயினும் ஒப்புக் கொண்டவாறு நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன என்ற விதந்துரைப்பின் அடிப்படையில் அவற்றிற்கான கொடுப்பனவுகள் நிறைவு செய்யப்படுதல் வேண்டும்.
  8. இவ்விதந்துரைப்பு 8.3ல் குறிப்பிட்ட ஐவர் குழுவின் பரிசீலனையின் பேரில் எழுத்து மூலமாக உறுதிப்படுத்தி கையெழுத்திட்டு சபைக்கு சமர்பிக்கப்படுதல் வேண்டும்.
 9. பொருளாளரின் கடமைகள்
  1. ரூபா 10,000/=க்கு மேற்பட்ட அனைத்து செலவினங்களுக்கான கொடுப்பனவுகள் வங்கி காசோலைகள் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
  2. தேவஸ்தான நிதி முறைக்கேடுகள் நடைபெற்றதாக நிறுபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அந்நிதியை மீளப்பெற ஆவண செய்தல் வேண்டும்.
 10. உயர் பதவிகள் தேர்ந்தெடுக்கப்படும் முறைகள்
  1. புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் அங்கத்தவர்களும் சிரேஷ்ட அங்கத்தவர்கள் அனைவரும் இணைந்து தலைவர், செயலாளர், இருவரைத் தெரிவு செய்வர். இருவருமே மாத்தளை மாநகர எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் வேண்டும். தலைவர், செயலாளர் தெரிவு செய்யப்படும் முதல் கூட்டத்துக்கு தற்காலிக தலைமை தாங்குவார். தற்காலிக செயலாளர் செயலாற்றுவார். தலைவர், செயலாளர் இருவரும் ஏகமனதாக தெரிவு செய்யப்படுவர். போட்டி ஏற்படும் பட்சத்தில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் (சிட்டை) தெரிவு செய்யப்படுவர். தெரிவு செய்யப்படுபவர்கள் சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவர்களுக்கு தற்காலிக தலைவர் நியமனக் கடிதங்களை வழங்குவார். வாக்கெடுப்பில் தற்காலிக தலைவரும், தற்காலிக செயலாளரும் கலந்து கொள்ளலாம். பிரேரித்து, ஆமோதிக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.
  2. ஏனைய உயர் பதவிகளான பொருளாளர், உபதலைவர், உபசெயலாளர் மூவரும் 12 அங்கத்தவர்களுக்கு இடையில் தெரிவு செய்யப்படுவர். புதிய தலைவர், செயலாளர் தலைமையில் இந்த தெரிவுகள் நடைபெறும். முடிந்தது நான்கு வருட காலம் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவலர் சபையில் அங்கம் வகித்த அனுபவம் உள்ளவராகவும், செயலாற்றியவராகவும் இருத்தல் வேண்டும். போட்டி ஏற்படும் பட்சத்தில், சுயமுகமான தீர்வுக்காக இரகசிய வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்படுவர். (சிட்டை) வாக்கெடுப்பில் சரிசமம் ஏற்படும் பட்சத்தில் தலைவர் தனது வாக்கை அளிக்கலாம்.

இப் புதிய விதிகள் TR 1 சட்ட மூலப் பிரதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 2014-05-10ம் திகதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது.

சமூக வலைத்தளங்கள்

முகநூல் (facebook)

ட்வீட்டர் (Twitter)

சகல உரிமைகளும் வரையறுக்கப்பட்டவை : COPYRIGHTED © 2014-2015
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம், மாத்தளை, இலங்கை.